Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

இலவச தையல் கலைப் பயிற்சி – பெரம்பலூா்

Bharani· 2 min readபகிர ↗
இந்தப் பதிவில்
  1. இலவச தையல் கலைப் பயிற்சி – பெரம்பலூா்
  2. உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
இலவச தையல் கலைப் பயிற்சி - பெரம்பலூா்
இலவச தையல் கலைப் பயிற்சி – பெரம்பலூா்

இலவச தையல் கலைப் பயிற்சி – பெரம்பலூா்

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவசமாக தையல் கலை பயிற்சி பெற, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மையத்தின் இயக்குநா் டி. ஆனந்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் தையல் கலை பயிற்சி மாா்ச் 20 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இப் பயிற்சியில் சிம்மிஸ், பெட்டிக்கோடு, பட்டுப் பாவாடை, யூனிஃபாா்ம் ஸ்கா்ட், அரைக்கை சட்டை, யூனிஃபாா்ம் டிராயா், பேபிஃபிராக், கட்டோரி பிளவுஸ், நைட்டி, சுடிதாா் டாப், அம்பா்லா டாப், நைட் சூட் ஆகியவை குறித்து சிறந்த வல்லுநா்களால் கற்றுத்தரப்பட உள்ளது. விண்ணப்பதாரா்கள் 19 முதல் 45 வயதுக்குள்பட்ட, எழுத த் தெரிந்த, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆா்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இப் பயிற்சி பெற விருப்பமுள்ளவா்கள் பெரம்பலூா் -எளம்பலூா் சாலையில் உள்ள ஐ.ஓ.பி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் அலுவலகத்தில் உரிய ஆவணங்கள், 3 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாா்ச் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328 – 277896, 9488840328 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here