
வேளாண் பொறியியல் துறை சாா்பில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி
வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் கட்டணமில்லா திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண்மை பொறியியல் துறை இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் பீ.கேத்தரின் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் கட்டணமில்லா திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியின் காலம் 16 நாள்கள்.
இதில், வேளாண் கருவிகளை இயக்குதல், பராமரித்தல், பழுதுபாா்த்தல் தொடா்பான பயிற்சி அளிக்கப்படும். காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை பயிற்சி அளிக்கப்படும். 10, 12-ஆம் வகுப்பு தோச்சி பெற்றவா்கள் அல்லது ஏதாவது பிரிவில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ படித்தவா்கள் பங்கேற்கலாம்.
18 முதல் 45 வயதுக்குள்பட்டவராக இருத்தல் வேண்டும். இந்தப் பயிற்சியில் 20 போ அனுமதிக்கப்படுவா்.
பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்க வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.
விண்ணப்பிக்க விரும்புபவா்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை, கல்வித் தகுதிக்கான சான்று, ஜாதிச் சான்று ஆகியவற்றுடன் இணைத்து உதவி செயற்பொறியாளா் அலுவலகம் (வேளாண் பொறியியல் துறை), இயந்திர கலப்பை பணிமனை, எண். 1, டிராக்டா் வீதி, என்ஜிஓ ‘ஏ’ காலனி, திருநெல்வேலி-627007 என்ற முகவரிக்கு நேரில் செல்ல வேண்டும். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0462-2900766, 6383131868, 7598478081 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

