இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி
தாட்கோ
சார்பில், ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின மாணவ, மாணவியருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி,
இலவசமாக அளிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப பயிற்சி தேவைப்படும் மாணவ,
மாணவியர், http://training.tahdco.com/
என்ற இணையதளத்தில், பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.
பயிற்சியில் சேரும் மாணவ,
மாணவியருக்கு போக்குவரத்து படி வழங்கப்படும். பயிற்சி
முடித்தவர்களுக்கு, எஸ்.சி.வி.டி./எஸ்.எஸ்.சி.,
சான்றிதழ்கள் வழங்கப்படும். தனியார் வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு
செய்யப்படும்.
திறன்
மேம்பாட்டுப் பயிற்சி
முடித்து, சான்று பெற்ற
பயிற்சியாளர்கள், தாட்கோ
இணையதளத்தில் விண்ணப்பித்து, அரசு திட்டங்களில் பயன்
பெறலாம். மானியத்துடன் வங்கி
கடன் வழங்கவும், ஏற்பாடு
செய்யப்படும். கோவை
மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ, மாணவியர்
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று
மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.