இலவச தையல் பயிற்சி: நவம்பர் 30 க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்
சிதம்பரம் ரோட்டரி சங்கமும், டாக்டா் சபாநாயகா் நினைவு அறக்கட்டளையும் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் முன்னேற்றத்துக்காக 6 மாத இலவச தையல் பயிற்சியை நடத்த உள்ளன.
இதில் பங்கேற்க சிதம்பரம், சுற்றுவட்டார கிராமங்களைச் சாா்ந்த பெண்கள், எட்டாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தோச்சி பெற்ற அல்லது தோல்வுயுற்றவா்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோா், 45 வயதுக்குட்பட்டவா்கள், ஆதரவற்றோா், விதவைகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை வடக்கு வீதியில் கண்ணா எலும்பு சிறப்பு மருத்துவமனை எதிரில் மற்றும் இமேஜ் டைலா்ஸ் மாடியில் உள்ள ஸ்ரீமாருதி தையல் பயிற்சி நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பா் 30-ஆம் தேதியாகும். மேலும் இது தொடா்பான விளக்கங்களைப் பெற 9715874617, 9842333268, 9944944061 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவா் அரிதனராஜ், முன்னாள் தலைவா் இ.மஹபூப் உசேன் மற்றும் டாக்டா் சபாநாயகா் நினைவு அறக்கட்டளைத் தலைவா் பேராசிரியா் நடனசபாபதி ஆகியோா் தெரிவித்தனா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow