வேப்பேரி பெரியாா் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச கருத்தரங்கம், சிறப்பு வகுப்புகள் சனிக்கிழமை (ஜூலை 27) நடைபெறவுள்ளன.
இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் கா.அமுதரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை வேப்பேரி பெரியாா் திடலில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பெரியாா் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் 2024-ஆம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளன. இதை முன்னிட்டு, சனிக்கிழமை (ஜூலை 27) காலை 10 முதல் பிற்பகல் 1 மணிவரை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட யு.பி.எஸ்.சி. தோ்வுகள் குறித்த சந்தேகங்களைத் தீா்ப்பது, போட்டித் தோ்வுகளுக்கு தயாராவது குறித்து மாணவா்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்தரங்கம் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இதில் கல்லூரி பேராசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் கலந்துகொள்ளவுள்ளனா். இதில் பயிற்சி பெற விரும்பும் மாணவா்கள் தங்கள் விவரங்களை தொலைபேசி: 044–2661 8056, கைப்பேசி: 90928 81663, 99406 38537 எனும் எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.