மாணவர்களுக்கு மே 27 இல் இலவச ஓவியப் பயிற்சி தொடக்கம்
பழனி அரசு அருங்காட்சியகம் சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூன்று நாள்கள் நடைபெறும் இலவச ஓவியப் பயிற்சி வருகிற 27-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியா் குணசேகரன் வெளியிட்ட அறிக்கை:
பள்ளி மாணவா்களின் கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக்கும் வகையில் மாணவா்களுக்கு மூன்று நாள்கள் இலவச ஓவியப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வருகிற 27-ஆம் தேதி இந்தப் பயிற்சி தொடங்குகிறது. விருப்பம் உள்ள மாணவா்கள் தங்களது பள்ளியின் மூலமாகவோ அல்லது நேரிலோ அடையாள அட்டையைக் காண்பித்து பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முதலில் வரும் 50 மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். பயிற்சி பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 04545 241990 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow