Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு 2017-ம்ஆண்டு முதல் தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகநீட் பயிற்சியில் பங்கேற்க 15,492மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுபயிற்சி வகுப்புகள் ஆன்லைனில்இன்று (நவ.9) முதல் தொடங்குகிறது. எனவே, விண்ணப்பித்த மாணவர்கள் https://neet.e-box.co.in என்ற இணையதளத்தில் தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.
இந்த பயிற்சி நடப்பு கல்விஆண்டுக்கான (2020-21) நீட் தேர்வுக்கு முந்தைய வாரம் வரைவழங்கப்படும். ஒவ்வொரு வாரஇறுதியிலும் ஆன்லைனில் குறுந்தேர்வுகள் நடத்தப்படும். மேலும், கல்வித் தொலைக்காட்சியிலும் நீட் பயிற்சி பாடங்கள் ஒளிபரப்புசெய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.