மதுரை சதர்ன் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரியில் 17 முதல் 22 வயதுக்குட்பட்ட ஆடவர், மகளிருக்கு இலவச கபடி பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆக.31 காலை 8:00 மணிக்கு ஆடவருக்கும், செப். 1 மகளிருக்கும் போட்டிக்கான தேர்வு நடைபெறும். தேர்வாகும் வீரர், வீராங்கனைகளுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படும். அலைபேசி: 97063 64815.