மேட்டுப்பாளையம்: காரமடையில் இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்பு, 16ம் தேதி துவங்குகிறது.காரமடை அடுத்த திம்மம்பாளையம் ராம்நகரில், ஸ்ரீ யாதவ் ஸ்ரீராம் அறக்கட்டளை செயல்படுகிறது.
இதன் ஒரு அங்கமாக கடந்த ஆண்டு ‘ஜனகா அகாடமி பார் ஐ.ஏ.எஸ்’ என்ற இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. இதில் இலவசமாக, 30க்கும் மேற்பட்ட கிராம மற்றும் நகர்ப்புற, மலைவாழ் மாணவர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., பயிற்சி அளிக்கப்படுகிறது.இரண்டாம் ஆண்டு வகுப்பு துவக்கம் மற்றும் மாணவர் சேர்க்கை வரும் 16ம் தேதி நடக்க உள்ளது. இதில் மாணவர்களுக்கு, பயிற்சி, புத்தகங்கள் மற்றும் தேர்வு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.