நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என சாலை போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாலை போக்குவரத்து நிறுவனமும், தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவசமாக கீழ்கண்ட 16 மையங்களில் ஆண், பெண் இருபாலருக்கும், கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளித்து, ஓட்டுநர் உரிமம் இலவசமாக பெற விண்ணப்பங்கள், வரவேற்கப்படுகின்றன. கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலுர், திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம், பொள்ளாச்சி, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோயில், மதுரை, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய 16 இடங்களில் பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு கீழ்கண்ட தகுதிகள் மட்டுமே இருத்தல் வேண்டும். 20 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். இலகுரகவாகன உரிமம் பெற்று ஓர் ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். பிஎஸ்வி பேட்ஜ் எடுத்திருக்க வேண்டும். இந்த இலவச பயிற்சியில் சேர விரும்புவோர் < https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/> என்ற இணையதள முகவரியில் உள்நுழைந்து பாடதிட்டத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.