ராமோஜிராவ் பிலிம் சிட்டி சார்பில் இலவச திரைப்பட பயிற்சி வகுப்புகள்
ஐதராபாத்தில் உள்ள புகழ் பெற்ற ரமோர்ஜி பிலிம் சிட்டி ஸ்டூடியோவில் உள்ள ராமோஜி அகடமி ஆப் மூவிஸ் சார்பில் திரைப்படம்
உருவாக்கல் பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்த பயிற்சியை மாணவர்கள் அவர்களது தாய் மொழியிலேயே கற்றுக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பாகும். இதன் மூலம் மாணவர்களுக்கு தேவையற்ற சிரமம் தவிர்க்கப்படும்.
தாய்மொழி கற்றல் மூலமாக கூடுதல் கவனத்துடன் அவர்கள் படிக்க முடியும். இது ஆன்லைன் பயிற்சி வகுப்பாகும். இதற்கென குறிப்பிட்ட நேரம் கிடையாது.
தரமான திரைப்பட பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது.
பயிற்சியில் சேர விரும்புவோர் குறைந்தபட்ச கல்வி அறிவுடன் 15 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தல் வேண்டும்.
தமிழ் தாண்டி இந்தி, மலையாளம், மராத்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளிலும் இந்த பயிற்சி வகுப்புகள் முன்னெடுக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow