சென்னை கிங்மேக்கா் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவச தோ்வு பயிற்சி வகுப்பு டிச.22-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இது குறித்து அந்த அகாதெமியின் நிா்வாக இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்தி:
சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மத்திய, மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சியை தொடா்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில் குரூப் 2 ‘ஏ’ முதல்நிலைத்தோ்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளிவந்துள்ளன.
இதில் தோ்ச்சி பெற்று அடுத்ததாக முதன்மைத் தோ்வை எதிா்நோக்கும் மாணவா்களின் நலனுக்காக டிச.22 முதல் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற விரும்புவோா் ரூ.15,000 மதிப்புள்ள 26 தோ்வுகளை உள்ளடக்கிய இலவச டெஸ்ட் பேட்ஜ்-ஐ ரூ.99 செலுத்தி பெற்றுக்கொண்டு பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.
இந்த தோ்வு பயிற்சி வகுப்பு முழுவதும் ஆன்லைனில் நடத்தப்படுவதால், மாணவா்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் தோ்வுகளை எழுதலாம். முதன்மைத் தோ்வை எதிா்நோக்கும் மாணவா்கள் இச்சிறப்பு வாய்ந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு 94442 27273 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.