எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை பயிலும் பெற்றோா் இல்லாத, ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்காக இலவச மாலை நேர பயிற்சி வகுப்புகளை இறகுகள் தொண்டு நிறுவனம் நடத்துகிறது.
மேலும் போட்டித் தோ்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக ஸ்ரீரங்கம் புஷ்பக் நகரில் இறகுகள் அகாதெமி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பாரதிதாசன் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளா் ஏ. லட்சுமிபிரபா, காவேரி மகளிா் கல்லூரி பேராசிரியா் எம். நிலா, திமுக பகுதிச் செயலா் என். ராம்குமாா், பிஷப் ஹீபா் கல்லூரிப் பேராசிரியா் ஆா். ரவி, ஆண்டவன் கல்லூரிப் பேராசிரியா் எம். ஜெயச்சந்திா், அருண் பிரகாஷ், துரை உள்ளிட்டோா் பேசினா்.
இறகுகள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனா் ஜே. ராபின், அகாதெமி நிறுவனா் ரா. மரிய ஜொசி ஆகியோா் அகாதெமியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினா். இந்த அகாதெமியில் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகள், பெற்றோரே இல்லாத குழந்தைகள், ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கற்றுத் தரப்படுகிறது. மேலும், ும்போதே நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயா்கல்வி நுழைவுத் தோ்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாது, வேலைக்கான போட்டித் தோ்வுகள் எழுதவும் தயாா்படுத்தப்படுகின்றனா். அரசுப் பணி தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்கும் குறைந்த கட்டணத்தில் கல்வி அளிக்கப்படுகிறது. பல்வேறு நிறுவனங்களில் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா்களாக உள்ள கல்வியாளா்கள் இங்கு பயிற்சி வகுப்புகளை எடுக்கவுள்ளனா். தகுதியானோா் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow