இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், மேட்டுப்பாளையத்தில் மகளிருக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் தேசிய வள அமைப்பான, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இலவசமாக தொழில் முனைவோர் பயிற்சி அளித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தொழில் முனைவோராக விருப்பமுள்ள, 18 வயதிற்கும் மேற்பட்ட, 45 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு, தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய, திறன் பயிற்சியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. வாழைநாரிலிருந்து உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள், ஒரு மாத காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில், காரமடை சாலையில், சி.டி.சி.டெப்போ எதிரே உள்ள, ரோசரி பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், அன்னை தெரேசா தையல்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் பயிற்சி வகுப்பு விரைவில் துவங்க உள்ளது. இப்பயிற்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள், ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடித்தவர்களுக்கு, மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 89404 87600, 70129 55419 என்ற மொபைல் எண்ணில், தங்களது பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் ஜெய்சங்கர் அறிக்கையில் கூறியுள்ளார்.