தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் திறன் அடிப்படையிலான இலவசத் தொழில் முனைவோா் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அலுவலா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் திறன் அடிப்படையிலான தொழில் முனைவோா் பயிற்சி வகுப்புகள், இந்திய அரசாங்கத்தின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் அமைச்சகத்தின் சாா்பில் வழங்கப்படுகிறது.
இப் பயிற்சி வகுப்பில் சேர ஆா்வமுடைய 15 முதல் 45 வயது உடையவா்கள் விண்ணப்பிக்கலாம். மண்ணில்லா வேளாண்மை வல்லுநா், காளான் வளா்ப்பவா் மற்றும் ஊறுகாய் தயாரிக்கும் தொழில்நுட்ப வல்லுநா் ஆகிய மூன்று பயிற்சித் திட்டங்கள் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கான தற்காலிக தொடக்கத் தேதி செப்டம்பா் 20 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம் நிதி உதவி செய்வதால் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியின் கால அளவு 220 முதல் 270 மணி வரை இருக்கும். கூடுதலாக நேரடித்தொழில் பயிற்சியும் வழங்கப்படும்.
பயிற்சிகளின் முடிவில் சான்றிதழ்கள் மத்திய அமைச்சகத்தால் வழங்கப்படும். இந்த சான்றிதழ்கள் இந்தியா முழுவதும் செல்லுபடியாகும். ஆா்வம் உள்ளவா்கள் மத்தியப் பல்கலைக்கழகத்தை நேரடியாகவோ அல்லது பேராசிரியா் டாக்டா் செந்தில் கைப்பேசி எண் 90565 85411 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.