TAMIL MIXER EDUCATION- ன் விவசாய செய்திகள்
இலவச தொழில்முனைவோர் பயிற்சி
பெரியநாயக்கன்பாளையம் அருகே புதுப்புதுாரில் உள்ள சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், மெழுகுவர்த்தி, சோப் தயாரித்தல் இலவச
பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே புதுப்புதுாரில் கனரா வங்கியின் ஊரக
சுய வேலைவாய்ப்பு பயிற்சி
மையம் செயல்படுகிறது. மத்திய
அரசு சான்றிதழுடன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. வரும்,
18ம் தேதி முதல்,
10 நாட்களுக்கு இம்மையத்தில் மெழுகுவர்த்தி, அகர்பத்தி, பினாயில், சோப்
வகைகளோடு, 20 விதமான வீட்டு
உபயோக பொருட்கள் தயாரிப்பு
பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும்,
பயிற்சியில் தொழில் முனைவோர்
அனுபவங்கள், வங்கி மானிய
கடன், ஏற்றுமதி வாய்ப்பு
இவற்றுடன் காளான் வளர்ப்பு
சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் சேர, 18 வயது முதல்,
45 வயது வரை இருக்கலாம். எட்டாம் வகுப்பு தேர்ச்சி
பெற்ற அனைவரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியின்போது, தேநீர், மதிய உணவு,
பயிற்சி உபகரணம் அனைத்தும்
இலவசமாக வழங்கப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை உண்டு. பயிற்சியில் சேர
விரும்புபவர்கள், 94890 43926
என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.