பெரியநாயக்கன்பாளையம் அருகே புதுப்புதூரில் உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் எம்ப்ராய்டரி இலவச பயிற்சி, 30 நாட்கள் நடக்கிறது.
இங்கு ‘ஆரி ஒர்க்’ என்ற எம்ப்ராய்டரி இலவச பயிற்சி வகுப்புகள், 30 நாட்கள் நடக்கின்றன.
ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பயிற்சி சேர வயது வரம்பு, 18 முதல், 45க்குள் இருக்க வேண்டும்.
எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். கோவை மாவட்ட கிராமப்புற மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சி சேர விருப்பம் உள்ளவர்கள் மொபைல் எண், 94890 43926 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.