Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
அமெரிக்க நிறுவனமான கோர்ஸராவுடன் திறன் மேம்பாட்டுக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
50 ஆயிரம் நபர்களுக்கு இலவசமாக ஆன் லைன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.தமிழக திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில் அமெரிக்க நிறுவனம் கோர்ஸராவுடன் இணைந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஆன்லைன் மூலம் 11 பிரிவுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த திறன்களை வளர்க்கவும் 50 ஆயிரம் பேருக்கு இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கோர்ஸரா80 நாடுகளில் ஆன் லைன் மூலம் திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனம் பல்கலைகள், கல்லுாரிகள், கூகுள், ஐ.பி.எம்., மற்றும் பிற அரசு நிறுவனங்களுடன் இணைந்து பொறியியல், இயந்திர கற்றல், கணிதம், வணிகம், கணினி, அறிவியல், டிஜிட்டல் சந்தைப்படுத்துதல், மருத்துவம், உயிரியல்,சமூக அறிவியல் போன்ற படிப்புகளை ஆன் லைனில் நடத்தி சான்றிதழ், பட்டப்படிப்புகளை வழங்குகிறது. உலகின் முன்னணி பல்கலை, தொழில் நிறுவனங்களில் உள்ள பயிற்றுநர்களை கொண்டு கற்பிக்கிறது. ஆன் லைன் மூலம் வேலை வாய்ப்பு சந்தைகளையும் நடத்துகிறது.
இப்பயிற்சியில் பங்கு பெற விரும்புபவர்கள் தமிழகத்தை சார்ந்தவராகவும் 18 வயது நிரம்பியவராகவும் 8ம் வகுப்புக்கு மேற்பட்ட கல்வித்தகுதியுடையவராகவும், வேலைவாய்ப்பற்றவராகவும் இருத்தல் வேண்டும்.பயிற்சியை பெற ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் ஆகிய விபரங்களுடன் அக்., 31க்குள் tnskill.tn.gov.in என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
Check Related Post: