சோலார் பேனல் அமைப்பது குறித்த இலவச பயிற்சி
மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் சோலார் பேனல் அமைத்தல் குறித்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
8ம் வகுப்புக்கு மேல் படித்த 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். பயிற்சி காலம் 40 நாட்கள். செய்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ், எஸ்.சி., எஸ்டி., ஜாதி சான்றிதழ் நகலுடன் டிச. 8 க்குள் நேரில் முன்பதிவு செய்ய வேண்டும்.
அலைபேசி: 86956 46417.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow