TAMIL MIXER EDUCATION.ன்
காவலா் தேர்வு பற்றிய
செய்திகள்
சீருடை பணியாளர்
தேர்வுக்கு இலவச பயிற்சி
– நாமக்கல்
இதுகுறித்து நாமக்கல் நாமக்கல் கலெக்டர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல்
மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில்
செயல்பட்டு வரும் தன்னார்வ
பயிலும் வட்டத்தின் மூலம்,
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக
நடத்தப்படுகிறது.
தற்போது,
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்
தேர்வுக் வாரியத்தால், 3,552 இரண்டாம்
நிலைக் காவலர் (ஆயுதப்படை
மற்றும் தமிழ்நாடு சிறப்புக்
காவல்படை), இரண்டாம் நிலை
சிறைக் காவலர் மற்றும்
தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வுக்காக, வரும்,
ஆக., 15 வரை இணைய
வழி மூலம், விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
போலீஸ் பணி எழுத்துத்
தேர்வுக்கு, இலவச பயிற்சி
வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் படி,
நேரடியாக நாமக்கல் மாவட்ட
வேலை வாய்ப்பு மையத்தில்
நடத்தப்பட உள்ளது. இந்த
வகுப்பு இன்று துவங்குகிறது.
பயிற்சி
வகுப்பில் பங்கேற்க விருப்பம்
உள்ள மனுதாரர்கள், தங்களின்
விபரத்தை, 04286 222260 என்ற தொலைபேசி
வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற
மின்னஞ்சல் வாயிலாகவோ, தங்களது
பெயர், முகவரி, தொலைபேசி
எண் அடங்கிய சுயவிபரத்தை பதிவு செய்து பயன்பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here