TAMIL MIXER EDUCATION.ன்
காவலா் தேர்வு பற்றிய
செய்திகள்
சீருடை பணியாளர்
தேர்வுக்கு இலவச பயிற்சி
– கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
இயங்கி வரும் தன்னார்வ
பயிலும் வட்டத்தில், தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வு
வாரியத்தால் நடத்தப்படும் இரண்டாம்
நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய
பணிகளுக்கான தேர்விற்கு இலவச
பயிற்சி வகுப்பு வரும்,
27ல் துவங்குகிறது.
இதில்,
முந்தைய தேர்வுகளின் மாதிரி
வினாத்தாள்கள் மற்றும்
தேர்வு பாடக்குறிப்புகள் வழங்கப்படும். வாரம் ஒருமுறை பாடவாரியாக தேர்வுகள் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள
விருப்பமுள்ளவர்கள், https://bit.ly/3RlzDOy
என்ற கூகுள் பார்ம்
லிங்க்கில் முன்பதிவு செய்யவும்.
அல்லது
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தங்களது முகவரிக்கான ஆதாரம் ஆகியவற்றுடன் வரும்,
27க்குள் கிருஷ்ணகிரி மாவட்ட
வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் சென்று பதியலாம்.
விபரங்களை,
04343 291983
என்ற தொலைபேசி எண்ணில்
தொடர்பு கொண்டு அறியலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here