டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி – தர்மபுரி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள, ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுக்கான இலவச பயிற்சியில் சேர பதிவு செய்யலாம்.
இது குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த டி.என்.பி.எஸ்.சி., ‘குரூப் — 4’ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று முதல் நடக்கிறது.இப்பயிற்சியில் விருப்பமுள்ளவர்கள், https://tinyurl.com/2xmb4ts9 இணைப்பின் மூலம், பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, அலுவலக தொலைபேசி, 04342- – 296188 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தேர்வர்கள் பயிற்சி வகுப்பில் சேரலாம். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow