தமிழக அரசு TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை வழங்குகிறது. சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தகுதியான தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
தமிழகஅரசு பணியில் பல லட்சம் காலிபணியிடம் உள்ளது. அந்த வகையில் அணியில் இணைவதற்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகல் பாராமல் படித்து வருகிறார்கள். இதன் படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானது அவ்வப்போது அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கான அரசு பணியும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பல ஆயிரங்கள் செலவு செய்து தேர்விற்கு படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை எளிய இளைஞர்களால் தேர்வில் வெற்றி பெற முடியாத நிலையானது உருவாகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஏற்கனவே குரூப் 4 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 2 A பிரிவிற்கான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஐகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி – IIற்கு 507 காலிப்பணியிடங்களும் மற்றும் தொகுதி IIA விற்கு 1820 காலிப்பணியிடங்களும், இலவச பயிற்சி
மொத்தமாக (TNPSC- GROUP-II &IIA 2327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 20.06.2024 அன்று வெளியிடப்பட்டது. முதல் நிலை தேர்வானது 14/09/2024 அன்று நடத்தப்பட்டது. தொகுதி-II மற்றும் IA முதல்நிலை தேர்விற்கு (TNPSC-GROUP-II&IIA Prelims) இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் மையத்தில் 18-07-2024 @ 10-09- 2024 வரை நடத்தப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட 15 நபர்கள் முதல் நிலை தேர்வில்தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விண்ணப்பிக்க அழைப்பு
மேலும், தொடர்ந்து முதன்மைத் தேர்விற்கான (TNPSC-GROUP-II&IIA Mains) வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் இயங்கும் தன்னார்வ நடைபெற்று வருகிறது. மையத்தில் பயிலும் வட்டத்தில் 14/10/2024 அன்று துவங்கப்பட்டு தொடர்ந்து இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தொகுதி-1 மற்றும் IIA முதன்மைத் தேர்விற்கு விண்ணப்பம் செய்த படிவ நகல். ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை 32. கிண்டியிலுள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மேலும், விவரங்களுக்கு. decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஐகடே தெரிவித்துள்ளார்.