![சிவகங்கை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி 1 சிவகங்கை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி](https://www.tamilmixereducation.com/wp-content/uploads/2024/06/tnpsc-1718873553-1024x576.jpg)
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தோ்வுகளில் (தொகுதி 2, தொகுதி 2 ஏ ) பங்கேற்பவா்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் சிவகங்கையில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தோ்வு (TNPSC GROUP II & IIA), துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் உள்ளிட்ட 2,327 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவா்கள் வருகிற ஜூலை 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தன்னாா்வப் பயிலும் வட்ட நூலகத்தில் இந்தத் தோ்வுக்கான புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் துறையின் மெய்நிகா் கற்றல் இணையதளத்தில் அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கான பாடக் குறிப்புகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
முதல் நிலைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், சிவகங்கை மாவட்ட ஆட்சியரக மயில்கேட் அருகேயுள்ள படிப்பு வட்டத்தில் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடைபெறுகிறது என்றாா் அவா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow