‘டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடத்தப்படுகிறது.
விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பங்கேற்று பயன்பெறலாம்’ என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி-1 (டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1) தேர்விற்கு, 90 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக, கடந்த, ஏப்., 15 முதல், செவ்வாய் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, மதியம், 2:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடந்து வருகிறது.ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், மாநில அளவிலான மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை, 04286—222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ, தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிபரத்தை பதிவு செய்து பயன்பெறலாம்.
தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2022,- 2023ம் ஆண்டு வெளியான டி.என்.யு.எஸ்.ஆர்.பி., – எஸ்.ஐ., தேர்வில், 5 பேர், போலீஸ் தேர்வில், 17 பேர் தேர்ச்சி பெற்று தற்போது பணியில் உள்ளனர். மேலும், 2023-24ம் ஆண்டு குரூப்-4 தேர்வில், 22 பேர், குரூப்-2 முதன்மை தேர்வில், 8 பேர் இறுதி கலந்தாய்விற்கு தேர்வாகி உள்ளனர். 2023-24ம் ஆண்டில், எஸ்.ஐ., தேர்வில், 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், போலீஸ் தேர்வில், 45 பேர் உடற்தகுதி தேர்வுக்கு சென்று முடிவிற்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow