TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி – கோவை
இது தொடா்பாக கோவை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் துணை ஆட்சியா், துணைக்
காவல் கண்காணிப்பாளா், உதவி
ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலா்,
உதவி இயக்குநா் உள்ளிட்ட
பிரிவுகளில் 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் -1 தேர்வுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளா்
தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான
இணையதள விண்ணப்பப் பதிவு
கடந்த ஜூலை 21 முதல்
ஆகஸ்ட் 22ம் தேதி
வரை நடைபெற்றது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரா்கள் தேர்வினை சிறப்பாக எழுதி
வெற்றி பெற ஏதுவாக
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டு மையம்
சார்பில் இலவச நேரடி
பயிற்சி வகுப்புகள் தொடங்க
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த
இலவச பயிற்சி வகுப்பில்
பங்கேற்க விரும்புபவா்கள் குரூப்
1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக வந்து பதிவு
செய்துகொள்ள வேண்டும். இந்த
பயிற்சி வகுப்பில் பாடக்குறிப்புகள், குழு விவாதம்,
பாடவாரியாக வகுப்புகள், மாதிரித்
தேர்வுகள் உள்ளிட்ட தேர்வில்
வெற்றி பெறுவதற்கான அனைத்துப்
பயிற்சிகளும் அளிக்கப்படும்.
மேலும்,
குரூப் 1 தேர்வுக்கு சம்பந்தமான பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்
இணையதளத்தில் இருந்து
எடுத்துக் கொள்ளலாம். எனவே
அரசுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் இந்த
வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow