மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆசிரியா் தகுதித்தேர்வு, டி.என்.பி.எஸ்.சி தொகுதி 2, 4 போட்டித் தேர்வுகள் எழுதவுள்ளோருக்கு, சீா்காழியில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது என ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் ஆசிரியா் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியா் தகுதித்தேர்வு, இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் மற்றும் டி.என்.பி.எஸ்.சியின் தொகுதி 2,4-க்கு உள்பட்ட பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு, ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் சீா்காழி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சீா்காழி எல்.எம்.சி. மைதானத்திற்கு அருகில் திருக்கோலக்காதெருவில் உள்ள ரோட்டரி சங்கக் கட்டடத்தில் திங்கள்கிழமை (ஆக. 28) முதல் வெள்ளிக்கிழமை வரையான வார நாள்களில் காலை 10.30 முதல் 1.30 மணிவரை அனுபவமிக்க பயிற்றுநா்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. எனவே, விருப்பமுள்ள இளைஞா்கள் தங்களது பெயா் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு 9499055904 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணிற்கு தகவல் அனுப்பி முன்பதிவு செய்துகொள்ளுமாறும், மேலும் ஆகஸ்ட் 28-ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ள கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் நேரில் கலந்துகொண்டு பயனடையுமாறும் தெரிவித்துள்ளாா்.