நவ. 20 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2ல் தேர்ச்சி பெற்ற மனுதாரர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர், 2222 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2ல் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இத்தேர்வு வருகிற 2024ம் ஆண்டு ஜன.7ம் தேதி நடக்க உள்ளது. தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய அசிரியர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில், சிறந்த வல்லுனர்களைக் கொண்டு வருகிற 20ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே, பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பத்துள்ளவர்கள் இந்நேரடி பயிற்சி மையத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்தகவலை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow