மாணவர்கள் போட்டி தேர்வுகள் எழுத இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., மற்றும் டி.ஆர்.பி., போன்ற தேர்வு முகமைகளால், போட்டி தேர்வுகளுக்காக, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
‘இப்பயிற்சி வகுப்புகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு போட்டி தேர்வுகளில், பயிற்சி பெற்று வெற்றி பெற வேண்டும்,’ என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள டி.என்பி.எஸ்.சி., குரூப்-2 தேர்விற்கு, 2,327 காலிப்பணி இடங்களுக்கான அறிவிப்பு, ஜூன், 20ல் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இம்மாதம், 19ம் தேதி. அதில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு, 19 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இப்பயிற்சி வகுப்புகளில் அதிக மாணவர்கள் பங்கேற்று, தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசு வேலைகளில் சேர வேண்டும்.
விருப்பம் உள்ள மாணவர்கள், ஊட்டி பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 6381875460 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.