TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
எஸ்.ஐ மற்றும் போலீஸ் தேர்வுக்கான இலவச
பயிற்சி – தூத்துக்குடி
எஸ்.ஐ மற்றும் போலீஸ் தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகளுக்கு
விண்ணப்பிக்கலாம்
என
தூத்துக்குடி
மாவட்ட
ஆட்சியர்
தகவல்
தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின்
எஸ்.ஐ மற்றும் காவலர் தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்பாக தூத்துக்குடி
மாவட்ட
ஆட்சியர்
செந்தில்ராஜ்
அறிக்கை
ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால்
621 சார்பு
ஆய்வாளர்கள்
பணியிடங்களுக்கான
அறிவிக்கை
வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
ஏதேனும்
ஒரு
பட்டப்படிப்பு
முடித்திருக்க
வேண்டும்.
வயது
வரம்பு
23 முதல்
30 வரை
இருக்க
வேண்டும்.
பிசி,
எம்பிசி,
பிசிஎம்,
பிரிவினருக்கு
2 ஆண்டுகளும்
எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு
5 ஆண்டுகளும்
வயதுச்சலுகை
உண்டு.
தேர்வு
கட்டணம்
ரூ.500
மட்டும்.
தேர்வுக்கு
விண்ணப்பிக்க
கடைசி
தேதி
30.06.2023 ஆகும்.
கூடுதல் விவரங்களுக்கு
https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்,
இரண்டாம்
நிலைக்காவலர்
பணிகளுக்கான
அறிவிக்கை
விரைவில்
வெளியிடப்பட
உள்ளது.
இத்தேர்வுகளுக்குரிய
இலவச
பயிற்சி
வகுப்புகள்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
சனிக்கிழமை
வரை
(10.30 மணி
முதல்
1.30 மணி
வரை)
நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது.
இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலக
நூலகத்தில்
பராமரிக்கப்பட்டு
வருகிறது.
மேலும்
போட்டித்தேர்விற்கு
வாரம்தோறும்
இலவச
மாதிரித்தேர்வுகள்
நடத்தப்பட்டு
வருகிறது.
எனவே எஸ்.ஐ மற்றும் காவலர் போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் தங்களது வேலைவாய்ப்பு
அடையாள
அட்டை
நகல்
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்
ஆகியவற்றுடன்
தூத்துக்குடி
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்
நெறி
வழிகாட்டும்
மையத்தை
அலுவலக
வேலைநாட்களில்
நேரடியாக
தொடர்பு
கொண்டு
இலவச
பயிற்சி
வகுப்பிற்கு
பதிவு
செய்து
கொள்ளலாம்.
காவல்துறை பணிகளில் சேர விருப்பமுள்ளவர்கள்
இந்த
இலவச
பயிற்சி
வகுப்பில்
சேர்ந்து
பயன்பெறலாம்.