தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (தாட்கோ) சாா்பில், அகில இந்திய சட்டக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு எழுதவுள்ள ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோந்த 18 முதல் 25 வயதுக்குள்பட்ட பிளஸ் 2 முடித்த மற்றும் தற்போது பிளஸ் 2 படித்து வரும் மாணவா்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இலவசப் பயிற்சிக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 3 லட்சம்.
மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் தாட்கோ அலுவலகத்தை நேரிலோ, 04322 221487 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இத்ககவலை மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொசி ரம்யா தெரிவித்துள்ளாா்.