கரூர்: மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில், போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், 621 காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை, சிறப்பு காவல் படை) தீயணைப்பு மீட்புத்துறை நிலைய அலுவலர், 129 பணிகளுக்கு நேரடி தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்கள் விபரத்தினை, 04324 -223555 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது studycirclekarur@gmail.com என்ற இ.மெயில் வாயிலாகவோ அல்லது கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன் பெறலாம்.
மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில், அனைத்து போட்டி தேர்வுக்கான காணொலி வழிகற்றல், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் மற்றும் தமிழில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.