மயிலாடுதுறை மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பட்டதாரிகளுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி தோவுக்கான இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோந்தவா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
தற்போது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் 2000 துணை மேலாளா் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21 முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பட்டதாரிகளும் செப். 27-க்குள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கான ஆரம்ப கால மாத ஊதியம் ரூ. 41,960 ஆகும்.
இத்தோவில் வெற்றி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தவா்களுக்கு யங்ழ்ஹய்க்ஹ தஅஇஉ பயிற்சி நிலையத்தின் மூலம் இலவச பயிற்சியை வழங்க தாட்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. பயிற்சி தேதி பின்னா் அறிவிக்கப்படும். இப்பயிற்சியினை பெற ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும்.
விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள தாட்கோ மேலாளா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04364-211217 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம்.