மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் ஜூலை 11-ஆம் தேதி முதல் போட்டித்தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளன. இதில் சேர தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் மு.அருணா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் தன்னாா்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடுஅரசுப்பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் ‘சிவில் ஜட்ஜ்’ பதவிக்கான 245 காலிப்பணியிடங்களுக்கான தோ்வு குறித்த அறிவிப்பு ஜூன் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியுடைய நபா்கள் ஜூன் 30-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இத்தோ்வுக்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் ஜூலை 11-ஆம் தேதி முதல் சென்னை, கிண்டியில் உள்ள தொழில்சாா் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தொடங்கப்படவுள்ளது.
இத்தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள மனுதாரா்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள கைப்பேசி: 9499966021, தொலைபேசி: 044-22501032 என்ற எண்கள் அல்லது ல்ங்ங்ா்ஸ்ரீட்ய்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம். எனும் மின்னஞ்சல் முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.