ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, 2ஏ முதன்மை தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு அக்.,16 முதல் நடக்கிறது.வார நாட்களில் காலை 10:30 முதல் மதியம்1:30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
விருப்பமும் உள்ள குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு எழுதி முதன்மை தேர்விற்கு தயாராகும் தேர்வாளர்கள் தங்களது புகைப்படம், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது 04567—230 160, 80721 79557 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.