கடலுார் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இலவச நேரடி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது.தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்விற்கு தயாராகும் போட்டி தேர்வர்கள் பயன் பெறும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 2:30 மணி முதல் 5:30 மணி வரை நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு 9499055908 என்ற மொபைல் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்துக் கொள்ளவேண்டும்.இவ்வாறு கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.