வேளாண் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக உதவி வேளாண் அலுவலர் பணிக்கு 84 பணிக்காலியிடங்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு 179 பணிக்காலியிடங்கள் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
மேற்படி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வருகிற 4-ம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இப்போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப் பயிற்சியில் கலந்து கொண்டு பயில்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 0421-2999152, 8682066089 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். போட்டித் தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் அனைவரும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow