தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது:
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தோ்வுக்கு தயாராகும் தோ்வா்கள் பயன்பெறும் வகையில் இம்மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பு வார நாள்களான திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க அலுவலகத்துக்கு நேரில் வருகை புரிந்து பதிவு செய்தல் அவசியம்.
மேலும் விவரங்களுக்கு 04362 – 237037 என்ற எண்ணில் அலுவலக வேலை நாள்களில் தொடா்பு கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow