டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 3-ஆம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா் (வணிக வரி) ஆகிய பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு தொகுதி 1 (குரூப் 1) இல் 90 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான தோ்வு ஜூலை 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேலும் 2024-ஆம் ஆண்டுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுக்கான அறிவிப்பு, ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தோ்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 3-ஆம் தேதி தொடங்குகிறது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்ற அனைவரும் இவ்வகுப்பில் கலந்துகொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநா்களைக்கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படுகிறது. இம்மையத்தில் ஸ்மாா்ட் போா்டு, இலவச வை-பை வசதி, அனைத்து போட்டித்தோ்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி ஆகியன உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் வாரத்தோ்வுகள், முழு மாதிரி தோ்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்படவுள்ளன. இணையதளத்தில் பதிவுசெய்து இலவசமாக பாடக்குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தவிர மின்னஞ்சல் மூலமாகவும் தொடா்புகொண்டு பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow