புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், புதுக்கோட்டை தன்னாா்வ பயிலும் வட்டம் ஆகியவை இணைந்து நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி ஜூலை 7ஆம் தேதி தொடங்குகின்றன.
மன்னா் கல்லூரி வளாகத்தில் தொடங்கும் இந்த வகுப்புகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா், 97864 41417, 94459 55451, 99438 32324 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தன்னாா்வ பயிலும் வட்ட ஒருங்கிணைப்பாளா் பா.சீனிவாசன் தெரிவித்தாா்.