NMMS தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
தேசிய வருவாய்வழி, திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின் (என்எம்எம்எஸ்) தேர்வுக்கான அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
என்எம்எம்எஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8- ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 9 -ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரையிலும் மாதம் ரூ.ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 3- ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கோவை கணிதவாணி கணித அறிவியல் கழகம், கோவை தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், உப்பிலிபாளையம் நூலக வாசகா் வட்டம் ஆகியவற்றின் சாா்பில் கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது.
டிசம்பா் 9 (சனிக்கிழமை) முதல் டிசம்பா், ஜனவரி மாதங்களில் சனிக்கிழமைகளில் இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் 94433- 16984 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று கணிதவாணி கணித அறிவியல் கழகத்தின் செயலரும், கோவை தொழில்நுட்பக் கல்லூரியின் உதவிப் பேராசிரியருமான இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow