ஒட்டன்சத்திரம்,-சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் ஜூலை 28ல் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இதனை பார்வையிடவும் செஸ் வீரர்களுடன் கலந்துரையாடவும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 10, 11ல் சர்வதேச தரத்தில் 9 சுற்றுகள் கொண்ட செஸ் போட்டி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்று வெற்றி பெறுவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோயில் எதிரில் உள்ள கான்பிடன்ட் செஸ் அகாடமியில் நாளை (ஜூன் 6) காலை 10 :00 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் விபரங்களுக்கு செயலாளர் சண்முககுமாரை 82202 66583ல் தொடர்பு கொள்ளலாம்.