தமிழகத்தில் அடுத்த
கல்வி ஆண்டுக்கான இலவச
பஸ் பாஸ்
தமிழகத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள்
தங்கள் வீடுகளில் இருந்து
அதிக தொலைவில் உள்ள
பள்ளிகளுக்கு செல்வதற்கு இலவசமாக அரசு பேருந்து
பாஸ்களை வழங்கியுள்ளது. இதன்
மூலம் மாணவர்கள் தங்கள்
வீடுகளில் இருந்து பள்ளிக்கு
இலவசமாக பேருந்துகளில் பயணித்துக் கொள்ளலாம்.
2020 – 2021ஆம்
கல்வி ஆண்டை பொறுத்த
வரையில் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் சரிவர
நடக்கவில்லை. அதிலும் 9, 10, 11 மற்றும்
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்றது. மற்ற மாணவர்களுக்கு ஒரு நாள் கூட
பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. இந்நிலையில் 12ம் வகுப்பை தவிர
அனைத்து வகுப்பினரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு
அறிவித்து மாணவர்களுக்கு விடுமுறை
அளித்துள்ளது.
அடுத்த
கல்வி ஆண்டுக்கான மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்
வழங்குவதற்கான ஆயத்த
பணிகளை பள்ளிகள் தொடங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
2021 – 2022ஆம் கல்வி ஆண்டுக்கான இலவச பஸ் பாஸ்
வழங்குவதற்காக மாணவர்களின் தகவல்கள் முன்னதாகே சேகரிக்க
உத்தரவிடப்பட்டு உள்ளது.
மாணவர்களின் பெயர், புகைப்படம் போன்ற
தகவல்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக நிர்வாகங்களுக்கு விரைந்து
அனுப்ப வேண்டும் என்றும்
உத்தரவிடப்பட்டுள்ளது.