தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் க்ரூம் இந்தியா சலூன் தனியார் நிறுவனம் (Groom India Salon Pvt Ltd) சார்பில் அழகுப்பயிற்சி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து வழங்கும் இலவச அழகுக்கலை பயிற்சி, மேற்படிப்பு படிக்க இயலாத மாணவ-மாணவியர்களுக்கு வேலைத்திறனை மேம்படுத்தும் பொருட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சான்றிதழுடன் இலவச பயிற்சிகள்:
இதற்கான தகுதியாக குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முதல் படித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல, 18 வயது முதல் 35 வயது உட்பட்டோர் தேர்வு செய்யப்படுவார்கள். இதன் வாயிலாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பியூட்டி தெரப்பி (Beauty Threapy), லேடிஸ் ஹேர் டிரெஸ்ஸிங் (Ladies Hair Dressing), மேக்கப் (Makeup), பார்பரிங் (Barbering) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன, இதற்கான அரசு சான்றிதழும் வழங்கப்படும்.
அரசு மானியத்துக்கு உதவி:
பயிற்சிக்கு பின் சிறந்த முறையில் செயல்பட்டு தேர்வு செய்யப்படுவோருக்கு, மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூபாய் 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை கிடைக்கும். அதேபோல படித்தவுடன் அனைவருக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கும். சுயதொழில் தொடங்க விரும்புவோர், அரசு மானியத்துடன் வங்கியில் கடன் உதவி பெற உதவி செய்யப்படும். தகுதி இருப்பவர்களுக்கு வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
பயிற்சி வகுப்புகள் விரைவில்:
இதற்கான பயிற்சி வகுப்புகள் ராயப்பேட்டை, ஆலப்பாக்கம், பூந்தமல்லி, கொளத்தூர், திருமுல்லைவாயல், கோவை, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, கரூர், ஏற்காடு ஆகிய பகுதிகளில் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் விபரங்களுக்கு 80728 28762 என்ற எங்களை தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளலாம்.