TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
ஏப்.1 முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட
அரிசி
வழங்கப்படும்
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு
வரவிருக்கும்
2023 பொங்கல்
பண்டிகையை
முன்னிட்டு
அரசு
என்ன
பரிசுத்தொகுப்பை
வழங்கப்போகிறது
என்று
எதிர்பார்ப்பு
மக்கள்
மத்தியில்
அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அண்மையில் நியாய விலைக்கடைகள்
மூலமாக
செறிவூட்டப்பட்ட
அரிசி
வழங்கப்படும்
என்று
உணவு
வழங்கல்
துறை
அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு உத்தரவுக்கு இணங்க வரும் 2023 ஏப்ரல் மாதம் முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட
அரிசி
வழங்கப்படும்
என்றும்
கூறியுள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது
ரேஷன்
கடைகளில்
வழங்கப்பட்டு
வரும்
அரிசியுடன்
கலந்து
இந்த
செறிவூட்டப்பட்ட
அரிசி
விநியோகிக்கப்படும்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று அமைச்சர் சக்கரபாணி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அரவை முகவர்களுடன்
ஆலோசனை
நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அப்போது 100 கிலோ சாதாரண அரிசியுடன் ஒரு கிலோ ஊட்டச்சத்து கலந்து செறிவூட்டப்பட்ட
அரிசியை
கலப்பது
குறித்து
முகவர்களுக்கு
பயிற்சி
வழங்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில்
பேசிய
அமைச்சர்
பொங்கல்
பரிசு
குறித்து
முதல்வர்
விரைவில்
அறிவிப்பார்
என்றும்
தெரிவித்துள்ளார்.