TAMIL MIXER EDUCATION- ன் கல்வி செய்திகள்
அரசு கல்லுாரிகளில் சேர,
இணைய வழியில் விண்ணப்பிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, மாணவர்
சேர்க்கை உதவி மையம்
அமைக்கப்பட்டுள்ளது
கடலுார்
மாவட்ட அரசு கல்லுாரிகளில் சேர, விண்ணப்பங்களை இணைய
தளம் வழியாக பதிவு
செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை
உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
வெளியாகியுள்ள நிலையில்,
உயர் படிப்புகளில் சேர்க்கை
துவங்கியுள்ளது.அந்த
வகையில், தமிழகத்தில் அரசு
கலை மற்றும் அறியவில்
கல்லுாரிகளில் மாணவர்
சேர்க்கையை துவக்க அரசு
நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி,
தமிழகத்தில் அனைத்து அரசு
கலை மற்றும் அறிவியல்
கல்லுாரிகளில் இளநிலை
பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும்
www.tngasa.org என்ற
இணைய தள முகவரிகளில் பதிவு செய்யலாம் என,
உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.அதன்படி, கடலுார் மாவட்டத்தில் உள்ள கடலுார் பெரியார்
அரசு மற்றும் கலை
கல்லுாரி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி, சி.முட்லுார்
தேவி கருமாரியம்மன் அரசு
கல்லுாரி, காட்டுமன்னார்கோவில் எம்.ஜி.ஆர்.,
அரசு கல்லுாரி, திட்டக்குடி அரசு கல்லுாரி ஆகிய
கல்லுாரிகளில் சேர,
இணையதள வாயிலான 22ம்
தேதி விண்ணப்பிக்கும் பணி
துவங்கியது.
வரும்
ஜூலை 7ம் தேதி
வரையில் விண்ணப்பிக்கலாம் என,
அந்தந்த கல்லுாரி முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.மாணவர்கள்
சேர விரும்பும் கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கு ஒரே
விண்ணப்பம் வழியாக இணைய
தளத்தில் விண்ணப்பிக்க முடியும்
என்றும், ஒரு கல்லுாரிக்கு விண்ணப்பிக்க ரூ.48
கட்டணம், பதிவுக் கட்டணம்
ரூ.2 செலுத்த வேண்டும்,
எஸ்.சி மற்றும்
எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவுமில்லை எனவும் அறிவித்துள்ளனர்.
இணைய
வழியில் விண்ணப்பிக்க வாய்ப்பு
இல்லாதவர்களுக்கு உதவ,
கடலுார் தேவனாம்பட்டினம் அரசு
கல்லுாரியில் மாணவர்
சேர்க்கை உதவி மையம்
அமைக்கப்பட்டுள்ளது.