தமிழகத்தில் ரூ.2000
முதல் தவணை பெறாதவர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக
மே 10ம் தேதி
முதல் முழு ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு
காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அவர்களின்
நலன் கருதி ரூ.4,000
நிதி உதவி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன் முதல் தவணையாக
ரூ.2,000 மே மாதம்
வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2,09,81,900 அரிசி
குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண
தொகை வழங்கும் திட்டம்
மே 15ம் தேதி
முதல் தொடங்கப்பட்டது.
மே
31ம் தேதியான இன்று
வரை 98.4% குடும்பங்கள் முதல்
தவணை நிவாரணத் தொகையினை
பெற்றுள்ளனர். மீதம்
உள்ள குடும்பங்களில் கொரோனா
தொற்று காரணமாகவும், வெளியூருக்கு சென்றுள்ளதாலும், கட்டுப்பாடுகளினால் போக்குவரத்து வசதி
இல்லாத காரணத்தாலும் முதல்
தவணை ரூ.2000 நிவாரணத்
தொகையினை பெற முடியவில்லை.
இதனால்
இவர்கள் அனைவரும் ஜூன்
மாதம் வழங்க இருக்கும்
இரண்டாவது தவணை தொகையுடன்
முதல் தவணை நிவாரணத்
தொகையினை பெற்றுக் கொள்ளலாம்
என்று அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் தகுந்த
சமூக இடைவெளி மற்றும்
முகக்கவசம் அணிவது போன்ற
கட்டுப்பாடுகளை முறையாக
கடைபிடிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.