பானிபூரி மற்றும் தெருவோர உணவகங்களுக்கு, மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பானிபூரி மற்றும் தெருவோர உணவகங்களுக்கு, மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் பானிபூரி விற்பனை செய்வோருக்கும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி மற்றும் பதிவு உரிமம் பெறுதல் அவசியம் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறைநியமன அலுவலர் சதீஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, “சென்னை முழுதும் மண்டல வாரியாக முகாம் நடத்தப்படும். குறிப்பாக, பானிபூரி விற்பனை செய்வோருக்கும், சுகாதாரமான முறையில் விற்பனை செய்தல் குறித்த பயிற்சி மற்றும் பதிவு உரிமம் பெறுதல்,மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். இதற்கான சிறப்பு முகாம் விரைவில் செயல்படுத்தப்படும்” என்றார்.