சென்னை அரசு இசைக் கல்லூரியில் நாட்டுப்புற கலை பயிற்சி
சென்னை அரசு இசைக் கல்லுாரியில் பகுதி நேரமாக நாட்டுப்புற கலைகளை பயில ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு, நாட்டுப்புற கலைகளை மேம்படுத்தும் வகையில், மாநிலத்தில் பல ஊர்களில் பகுதி நேர கலைப்பயிற்சி வகுப்புகளை அடுத்த மாதம் முதல் ஓராண்டுக்கு நடத்த உள்ளது.
சென்னையில், இசைக்கல்லுாரியில், தப்பாட்டம், கானா பாட்டு, நையாண்டி மேளம், துடும்பாட்டம் ஆகிய கலைப்பயிற்சிகள் நடத்தி, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. வாரந்தோறும் வெள்ளி, சனிக்கிழமைகளில், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை நடக்கும் இதில் பங்கேற்க, 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
இதற்கு 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளோர் இந்த மாதத்துக்குள் கல்லுாரி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 – 2493 7217 என்ற தொலைபேசி எண்ணிலோ, 99623 99225 என்ற மொபைல் போன் எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow