TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்
கொரோனா தொற்றால்
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தனியார்
பள்ளிகளில் கட்டணம் ரத்து
தற்போது
பெற்றோர் இருவருமே கொரோனா
பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதனால்
பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி படிப்புக்கு அரசு
பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா
தொற்றால் பெற்றோரை இழந்த
மாணவர்களுக்கு கல்வி
படிப்பை தொடர்ச்சியாக மேற்கொள்ள
முக்கிய அறிவிப்பு ஒன்று
வெளியிடப்பட்டுள்ளது. இது
தொடர்பாக அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
இதில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கொரோனா
தொற்றால் பெற்றோரை இழந்த
மாணவர்கள் படித்தால் அவர்களுக்கும் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
இந்த மாணவர்கள் அதே
பள்ளியில் கல்வி படிப்பை
தொடர்வதை உறுதி செய்ய
வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு
தனியார் பள்ளியில் பயிலும்
பொருளாதார ரீதியாக மிகவும்
பின்தங்கிய குடும்பத்தை சார்ந்த
மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here